கொரோனாவால் ஸ்பெயினில் பலியானவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது

ஸ்பெயினில் கரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

உலகம் முழுவதும் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் 9 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு 47 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இதில் ஸ்பெயினில் கரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை வியாழக்கிழமை 10,003 ஆக உயர்ந்துள்ளது.

புதன்கிழமை இறப்பு எண்ணிக்கை 9,053 ஆக இருந்த நிலையில் ஒரே நாளில் 950 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செவ்வாயன்று ஸ்பெயினில் கரோனா வைரஸ் தொடர்பாக 864 இறப்புகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெயினில் இதுவரை 1,10,238 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே