கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதனை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும், அந்த வைரஸ் தொடர்ந்து அதிகரத்த வண்ணம் இருக்கிறது.
இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ள அனைத்து கட்சி கூட்டம் கூட்ட வேண்டும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.
அதற்கு எதிராக, அனைத்து கட்சி கூட்டம் தேவையில்லாதது என்று திமுக விவசாய அணி மாநில செயலாளர் கே.பி இராமலிங்கம் அறிக்கை வெளியிட்டார்.
கட்சியின் தலைமைக்கு எதிராக அறிக்கை வெளியிட்டதால், அவரது பதவி பறிக்கப்பட்டது.
இந்நிலையில் கழகத்தின் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக அவர் நீக்கப்படுவதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.