சாலையில் செத்து கிடந்த நாயின் இறைச்சியை உண்ட தொழிலாளி! (VIDEO)

ஊரடங்கு சமயத்தில் ஏழை மற்றும் தினக்கூலிகளின் ஒரே பிரச்னையாக இருப்பது உணவு மட்டும்தான். இப்படிப் பசியினால் செத்து போன நாயின் இறைச்சியை உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் ஜெய்ப்பூரில் இருக்கும் ஒரு தொழிலாளி.

கரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. இதனால் பலர் தங்களது சொந்தங்களை இழந்து வாடுகின்றனர்.

அதே போல, பலர் தங்களது வேலைகளையும் இழந்து தவித்துவருகின்றனர்.

கரோனா வைரஸ் என்னும் கொடிய நோய் பலரது வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றிவிட்டது.

அந்தவகையில், ராஜஸ்தானை சேர்ந்த தொழிலாளி ஒருவர் பசியின் கொடுமையால் செய்த காட்சி ஒன்று சமூகவலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் டெல்லி- ஜெய்ப்பூர் சாலையில் சென்றுகொண்டிருந்த பிரதுமன் சிங் நாருகா என்பவர் வீடியோ ஒன்றை பதிவிட்டு அதனை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

அதில், ஏழை தொழிலாளி ஒருவர் சாலையில் இறந்துகிடந்த நாய் ஒன்றை சாப்பிட்டுக்கொண்டிருந்த காட்சி இடம்பெற்றுள்ளது.

இந்த நபர் அந்த தொழிலாளி நாய் சாப்பிடுவதை தடுத்து அவருக்கு உணவு மற்றும் சிறிது பணத்தை கொடுத்துவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்துள்ளார்.

உலகின் மிகவும் கொடூரமானதாக பார்க்கப்படும் பசிக்கொடுமை காரணமாக பல உயிரிழப்புகள் நிகழ்ந்தவண்ணம் இருக்கிறபோதிலும் பல பேர் தங்களது பசியைப் போக்க இதுபோன்ற விபரீத முடிவுகளையும் எடுத்துவருகின்றனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே