சுர்ஜித் மூலம் நாம் கற்கும் பாடம்

67 மணி நேரத்துக்கும் மேலாக குழந்தை தற்பொழுது ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிக் கொண்டு இருக்கும் இந்த வேளையில், குழந்தை சுர்ஜித் எப்போதும் மீட்டப்படுவான் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கும் அதே நேரத்தில் இனியும் இது போன்ற ஒரு நிகழ்வு மீண்டும் ஏற்பட்டு விடாமல் இருப்பது அவசியம்.

ஆழ்துளை கிணறுகள் திறந்த படி இருப்பது மிகவும் ஆபத்தானது என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டிய தருணம் இது.

குறிப்பாக மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளை உடனடியாக மூட நாம் அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளை எங்கேனும் நாம் கண்டால் அவை மூடப்பட விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டியது நம்முடைய அவசியமாக இருக்கிறது.

அரசோ, அதிகாரிகளோ நடவடிக்கை எடுக்கட்டும் என்று எண்ணாமல் செயலில் மக்களாகிய நாமும் இறங்க வேண்டும் என்பதுதான் ஒரு முக்கியமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.

புதிதாக ஆழ்துளை கிணறுகளை தூண்டுவதாக இருந்தால் விதிகளை முறையாக நாம் பற்றவேண்டும்.

விதிகளை பின்பற்றாமல் யாரேனும் செயல்பட்டால் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து அவர்களுக்கு நாம் எடுத்துரைக்க வேண்டும்.

அறிவுரை அளித்த பிறகும் அவர்கள் அலட்சியமாக இருந்தால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நாம் முன்வரவேண்டும்.

மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகள் விஷயத்தில் உட்சபட்ச விழிப்புணர்வை மக்களாகிய நாமும் கொண்டிருக்க வேண்டும்.

ஒரு சிறிய அலட்சியம் கூட பெரிய ஆபத்திற்கு வித்திட்டிடும் என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டிய தருணம் இது. போதிய விழிப்புணர்வு முன்பே இருந்திருந்தால் சுர்ஜித்திற்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்பதை நாம் எண்ணிப் பார்த்து இருப்போம்.

இனியாவது நாம் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதே சுர்ஜித் மூலம் நாம் கற்கும் பாடம் ஆக இருக்கட்டும்.

ஆழ்துளை கிணற்றில் இனியும் ஒரு குழந்தைகூட விழுந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்போம்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே