செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட குளிர்கால சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி தொடங்குகிறது.

வழக்கமாக கோட்டையில் நடைபெறும் கூட்டத்தொடர், இந்த முறை கொரோனா மற்றும் இட நெருக்கடி காரணமாக சென்னை சேப்பாக்கத்தில் இருக்கும் கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது.

அதற்காக கலைவாணர் அரங்கு தயார் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்பது குறித்து சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் குழு ஆலோசனை இன்று ஆலோசனை நடத்தியது.

அந்த ஆலோசனையின் முடிவில், வரும் செப்.14 முதல் 16 வரை 3 நாட்கள் மட்டுமே கூட்டத்தொடரை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு 72 மணி நேரத்துக்கு முன்னர் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

அதன் படி அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கொரோனா பரிசோதனை நடக்கிறது.

மேலும் அதிகாரிகள், பணியாளர்கள், போலீசார் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு பரிசோதனை செய்யப்பட உள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே