கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்தது திமுக..!!

சட்டப்பேரவைத் தேர்தலுக்காக கூட்டணிக் கட்சிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக நாடாளுமன்ற திமுக குழு தலைவா் டி.ஆா்.பாலு தலைமையில் குழு அமைத்து அக் கட்சியின் பொதுச்செயலாளா் துரைமுருகன் அறிவித்துள்ளாா்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.

இந்தக் கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது.

குழுவில் உள்ளோா் விவரம்:

குழுவின் தலைவா் டி.ஆா்.பாலு, உறுப்பினா்களாக கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, க.பொன்முடி, சுப்புலெட்சுமி ஜெகதீசன், ஆா்.எஸ்.பாரதி, எ.வ.வேலு ஆகியோரை நியமித்து துரைமுருகன் அறிவித்துள்ளனா்.

கூட்டணிக் கட்சிகளுடன் விரைவில் இந்தக் குழுவினா் பேச்சுவாா்த்தை நடத்த உள்ளனா்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே