392 சிறப்பு ரயில்களை இயக்கப்படுவதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

பண்டிகைக் காலங்களில் அக்.,20ம் தேதி முதல் நவ.30ம்தேதி வரை நாடு முழுவதும் 392 சிறப்பு ரயில்களை இயக்கப்படும் என்று இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி தெற்கு இரயில்வே தரப்பில் திருவனந்தபுரம் to ஷாலிமர் வாராம் இருமுறை ரயில் சேவையும், நாகர்கோவில் – கொல்கத்தா, மதுரை – பிகானேர் வாரந்திர ரயில், சென்னை எழும்பூர் – நாகர்கோவில் விரைவு ரயில் ஆகிய ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சிறப்பு ரயில்களுக்கான கட்டணம் சாதாரண மற்றும் விரைவு ரயில்களின் கட்டணத்தை விட 10% முதல் 20% வரை கூடுதலாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே