சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.376 குறைந்து 38,704க்கு விற்பனை..!!

சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.47 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.4,838க்கு விற்பனையாகிறது.

பொது முடக்க காலங்களில் தங்கம் விலை எதிர்பாராத அளவுக்கு விலை உயர்வை சந்தித்தது.

அப்போது ரூ.43 ஆயிரத்தை எட்டிய தங்கம் விலை, மேலும் உயரும் என பரபரப்பாக பேசப்பட்டு வந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வரத்து குறைவு மற்றும் பொருளாதார வீழ்ச்சியால் வரலாறு காணாத விலை உயர்வு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

அதன் பிறகு, கணிசமாக குறைந்த தங்கம் விலை தற்போது ரூ.38 ஆயிரத்தில் நீடிக்கிறது.

இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.47 குறைந்து, ரூ.4,838க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.376 குறைந்து, ரூ.38,704க்கு விற்பனையாகிறது. 

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.90 குறைந்த நிலையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.64.60க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.64,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே