புதிய கல்விக்கொள்கையில் தொழில்நுட்பம் சார்ந்த கற்பித்தலுக்கு முக்கியத்துவம்… மோடி விளக்கம்..!!

உலக தரத்திற்கு இணையான கல்வியை நம் மாணவர்கள் பெற வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். புதிய கல்விக்கொள்கை மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றிய பிரதமர் பேசியதாவது, ” உலகத்தரமான கல்வியை மாணவர்கள் பெற்றாலும் நமது பாரம்பரியத்தை மறக்க கூடாது.

ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்புடன் மாணவர்கள் கல்வி பயில வேண்டும். இளைஞர்களுக்கான வளமான எத்ரிகாலத்தை உருவாக்க வேண்டியது நமது கடமை. கல்வி, மற்றும் திறன்களுடன் இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்க புதிய கல்விக்கொள்கை அவசியம்.

மாநில மொழிகளில் பாடம் கற்பிப்பது இளம் மாணவர்களின் சித்தனை திறனை வளர்க்கும். மாணவர்கள் புதுவிதமாக சிந்திக்க நாம் வழிகாட்ட வேண்டும். பழைய கல்விக்கொள்கையால் எதிரிபார்த்த பலன் கிடைக்கவில்லை.

பழைய கல்விக்கொள்கை மாணவர்களுக்கு சுமையை அதிகரிக்கும் வகையில் இருந்தது. தற்போது பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக்கொள்கையில் தொழில்நுட்பம் சார்ந்த கற்பித்தலுக்கு முக்கியத்துவம் தருகிறது.

பள்ளிக்கூடம், வகுப்பறைகளில் மாணவர்களின் சுமைகளை குறைக்க வேண்டும். வகுப்புகள், பாடங்கள் என மாணவர்கள் மீது நாம் அழுத்தம் கொடுக்கக் கூடாது. கலந்தாலோசனை, ஆய்வு அடிப்படையிலான கல்வியை நாம் ஊக்குவிக்க வேண்டும்.

பள்ளிக்கூடங்களிலேயே மாணவர்களுக்கு பலதரப்பட்ட வாய்ப்புகளை நாம் வழங்க வேண்டும். இதுபோன்று சீர்திருத்தங்களை வேகப்படுத்தும் பட்சத்தில் நாட்டின் வளர்ச்சி மேம்படும். கல்வி பயிலும் போதே உலக அளவிலான போட்டிகளுக்கு மாணவர்களை தயார் செய்ய வேண்டும்.

அனைத்து விதமான தொழிலார்களும் மதிப்பு மிக்கவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க கூடாது. தொழிலாளர்களை இளக்காரமாக பார்க்கும் போக்கை மக்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்” எனக்கூறியுள்ளார்

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே