பஞ்சாபில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன்

பஞ்சாப் மாநில அரசு 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன்களை வழங்கியது.

பஞ்சாப் மாநிலத்தில் 2017 சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்குவதாக வாக்குறுதி வழங்கப்பட்டது.

ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்களுக்கு பிறகு தற்போது வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளனர்.

96 கோடி ரூபாய் மதிப்புள்ள ‘பஞ்சாப் ஸ்மார்ட் இணைப்பு திட்டத்தை’ முதல்வர் அமரீந்தர் சிங் காணொளி மூலம் தொடாங்கி வைத்தார்.

ஒரே நேரத்தில் 26 இடங்களில் பல்வேறு அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மாநிலம் முழுவதும் ஸ்மார்ட் போன்களை விநியோகித்தனர்.

இத்திட்டத்தை தொடக்கி வைத்து முதல்வர் பேசுகையில்,

முதல் கட்டமாக இத்திட்டத்தின் மூலம் நவம்பர் மாதத்திற்குள் அரசுப் பள்ளியில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 1,74,015 பேர், பட்டியல் சாதி பிரிவைச் சேர்ந்த 94,832 இளைஞர்கள், பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த 36,555 இளைஞர்கள் பயனடைவார்கள்.

இத்திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் ஸ்மார்ட் போன்கள் மாணவர்களின் கல்விக்கு ஒரு முக்கிய கருவியாக மாறும் என்று முதல்வர் கூறினார்.

Related Tags :


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2759 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே