#NEP2020: 2030ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வி என்பதுதான் இலக்கு… புதிய கல்விக்கொள்கை குறித்து பிரதமர் மோடி!!

புதிய கல்விக் கொள்கை மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். அதில் அவர் தெரிவித்தாவது, இந்திய கல்வித்துறையில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டியது அவசியம்.

திறம், மேம்பாடு என்பதை அடிப்படையாக கொண்டு நமது புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் சிந்தனை திறனை ஊக்குவிக்கும் வகையிலான கல்வி அவசியம். வேலை வாய்ப்புகளை எளிதாக்கும் வகையில் கல்வித்துறையில் மாற்றம் செய்ய வேண்டும்.

நமது கல்வி முறையில் புதிய கல்விக் கொள்கை சாதகமான மாற்றத்தை உருவாக்கும். 2030ம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் கல்வி என்பதுதான் இலக்கு. ஏற்றத்தாழ்வுகளற்ற கல்வி வழங்குவதை புதிய கல்வி கொள்கை உறுதி செய்கிறது.

பல வருடங்களாக நடைபெற்ற ஆலோசனை, விவாதங்களை தொடர்ந்து புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. சீர்திருத்த நடவடிக்கைகள் மட்டுமே எந்த விஷயத்திலும் நம்மை முன்னோக்கி அழைத்து செல்லும்.

அனைத்து தரப்பு கருத்தையும் கேட்டபிறகே புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையில் எந்தவித பாகுபாடும் கிடையாது” என தெரிவித்துள்ளார்.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே