மனைவியின் பிரிவால் ஏற்பட்ட துயரத்தை மெழுகுச் சிலையால் வடிவமைத்து ஆறுதல் தேடிக்கொண்டுள்ளார் அன்புக் கணவர்.
கர்நாடக மாநிலம் பெல்லாரி அருகே உள்ள கொப்பல் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இந்நிலையில், கிருஷ்ணன் தனது புதுமனை புகுவிழா நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் மறைந்த தனது மனைவியின் பங்கேற்பும் இருக்க வேண்டும் என்று நினைத்த அவர், மனைவியின் உருவம் போன்ற மெழுகு சிலையயை தத்ரூபமாக வடிவமைத்துள்ளார்.
புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட இந்த சிலையை, உற்றார் உறவினர் பிரமிப்போடு பார்த்துச் சென்றனர். தங்களின் தாயார் மீண்டும் உயிரோடு வந்ததாக அவர்களது பிள்ளைகள் கூறினர்.
Related Tags :
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.