மணிப்பூரில் ஆட்சியை தக்க வைத்தது பாஜக!

மணிப்பூரில் ஆளும் ஆட்சியான பாஜக எதிர்த்து காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத தீர்மானத்தின் மீது நடைபெற்ற வாக்கெடுப்பில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.

மணிப்பூரில் பைரன் சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மணிப்பூரில் போதைப் பொருள் கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கையை முன்வைத்தது.

ஆனால், இந்த வேண்டுகோளை அரசு நிராகரித்து.

இதனால் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை காங்கிரஸ் கொண்டு வந்த நிலையில் சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடந்தது.

இதில் நம்பிக்கை தீர்மானத்தை முதல்வர் பிபைரன் சிங் கொண்டு வந்தார்.

நேற்று முழுவதும் நடந்த விவாதத்துக்கு பின்பு குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் ஆளும் ஆட்சி பாஜக வெற்றி பெற்றது .

இதன் பின்பு 60 உறுப்பினர்களைக் கொண்ட சட்ட பேரவையில் 53 உறுப்பினர்கள் இருந்தனர்.

இதில் பாஜக கூட்டணிக்கு 28 பேரும், காங்கிரசுக்கு 24 பேரும் இருந்தனர். எட்டு காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே