அயோத்தி விவகாரம் கடந்து வந்த பாதை.

1528: அயோத்தியில், பேரரசர் பாபர் ஒரு மசூதியை கட்டுகிறார். அந்த இடம் ராமர் பிறந்த இடம் என்று இந்துத்துவத்தினர் உரிமை கோரினர்.

1853-1949: இரு தரப்பினரிடையே தொடர்ந்து மோதல்கள் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து அந்த இடத்தின் உட்பகுதியை இஸ்லாமியர்களுக்கும், வெளிப்பகுதியை இந்துத்துவர்களுக்கும் ஒதுக்கியது பிரிட்டிஷ் அரசு.

1949: மசூதிக்குள் ராமர் சிலை வைக்கப்பட்டது. இதையடுத்து அதற்கு இஸ்லாமியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட, மோதல் உருவானது. இதையடுத்து அது பிரச்னைக்குரிய இடம் என்று அறிவித்த நடுவண் அரசு அப்பகுதியை பூட்டி சீல் வைத்தது.

1950 : ராமர் சிலைக்கு பூசைகள் செய்ய அனுமதிக்கவேண்டும் என இரண்டு மனுக்கள் பைசாபாத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 1959 ம் ஆண்டு நிர்மோஹி அகராவால் மூன்றாம் மனு தாக்கல் செய்யப்பட்டது.

1961 : உத்திரபிரதேச சன்னி வக்ப் வாரியத்தின் சார்பில் இடத்தைத் தங்களிடம் அளிக்கக்கோரியும் அங்குள்ள சிலைகளை அகற்றவேண்டும் என்றும் கோரியும் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

1986 : பிரச்னைக்குரிய இடத்தின் கதவுகளின் பூட்டை அகற்றவும், ராமர் சிலைக்கு பூசைகள் செய்யவும் மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்தது.

1992 , டிசம்பர் 6 . : இந்துத்துவ கரசேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது, நாடு முழுதும் மோதல்கள் ஏற்பட்டன. இதில் இரண்டாயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

2001 : பாபர் மசூதி இடிப்பு மற்றும் வன்முறை குறித்த வழக்கை விசாரித்து வந்த சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகளாக கூறப்பட்ட அத்வானி, கல்யாண் சிங் உள்பட 13 பேரை விடுவித்தது.

2002 : கோத்ரா ரயிலுக்கு வைக்கப்பட்ட தீயில் கருகி 58 பேர் உயிழந்தனர். அதைத்தொடர்ந்து நடைபெற்ற வன்முறையில் 2000 பேர் வரை கொல்லப்பட்டனர்.

2010 : அலகாபாத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மூன்றில் இரண்டு பங்கு இடத்தை ராமர் கோவிலுக்கும், ஒரு பங்கு இடத்தை வக்ப் வாரியத்துக்கு வழங்கி தீர்ப்பளித்தது.

2011 : அலஹாபாத் வழங்கிய இந்தத்தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

2017 : ராமர் கோவில் -பாபர் மசூதி பிரச்னை குறித்து நீதிமன்றத்துக்கு வெளியில் பேசி முடிவெடுக்க உச்சநீதிமன்றம் அறிவுரை கூறியது.

2019 மார்ச் 8 : இந்த விவகாரம் தொடர்பாக இருதரப்பிடம் பேசி முடிக்க நடுவர் குழுவுக்கு எட்டு வாரம் அவகாசம் அளித்தது உச்சநீதிமன்றம்

2019 ஆகஸ்ட் 1 : நடுவர் குழு தந்தது அறிக்கையை உச்சநீதிமன்றத்திடம் சமர்ப்பித்தது.

2019 ஆகஸ்ட் 2 : அயோத்தி விவகாரத்தில் நடுவர் குழு சரியான தீர்வை அடையாமல் தோல்வி அடைந்துவிட்டதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

2019 நவம்பர் 9 : பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே