ஹீரோயினாகும் சாய் பல்லவியின் தங்கை

சாய் பல்லவி நடித்த ’தியா’ படத்தை ஏ.எல் விஜய் இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரபல ஸ்டண்ட் இயக்குநர் சில்வா பல மொழிகளில் பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். தற்போது திரைப்பட இயக்குநராகவும் அறிமுகமாக இருக்கிறார்.

சில்வா இயக்கும் இந்த புதிய படத்தில் பிரபல நடிகையின் தங்கை ஹீரோயினாக அறிமுகமாக இருக்கிறார். அது யார் என யோசிக்கிறீர்களா? நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் தான். இவர் இயக்குநர் ஏ.எல்.விஜய்யிடம் உதவி இயக்குநராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்டண்ட் சில்வா இயக்கும் இந்தப் படத்தின் கதையை ஏ.எல் விஜய் எழுதியிருக்கிறார். படத்தில் சமுத்திரகனி, ஸ்டண்ட் சில்வா ஆகியோரும் நடிக்கின்றனர். சாய் பல்லவி நடித்த ’தியா’ படத்தை ஏ.எல் விஜய் இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பட்டப்படிப்பை முடித்த பூஜாவும் தனது சகோதரியைப் போன்றே திறமையான நடனக் கலைஞர். ‘காரா’ என்ற குறும்படத்திலும் நடித்துள்ளார். பல அம்சங்களில் தனது சகோதரி சாய் பல்லவியைப் போலவே தோற்றமளிக்கும் பூஜா கண்ணனை, பெரும்பாலும் சாய் பல்லவியின் இரட்டை சகோதரி என நெட்டிசன்கள் தவறாக நினைத்துக் கொள்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே