கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் அனைத்தும் மூடப்பட்டிருந்ததால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

அதனால் தற்போது ரயில், பள்ளி கல்லூரிகள் மற்றும் தியேட்டர்கள் தவிர மற்ற அனைத்துக்கும் அரசு அனுமதி அளித்தது.

நாளை முதல் அரசு அனுமதி வழங்கியுள்ள அனைத்தும் தொடங்க உள்ளதால், அவற்றுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

ஹோட்டல்களை பொறுத்தவரை, உணவகத்தில் சமைக்கும் பணியாளர்கள் முகக்கவசம் அணிதல் வேண்டும்.

வாடிக்கையாளர்களும் மாஸ்க் அணிய வேண்டும், ஹோட்டல், கிளப் ரிசப்ஷனில் கிருமி நாசினி கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும்; கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஹோட்டல்கள், கிளப் செயல்பட அனுமதி இல்லை என்றும்; வாடிக்கையாளர்களின் உடமைகளை முறையாக தூய்மை படுத்த தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல வணிக வளாகங்களை பொறுத்தவரை, ஊழியர்கள் எல்லாரும் மாஸ்க் அணிய வேண்டும், அடிக்கடி கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும், வாடிக்கையாளர்கள் இடையே 6 அடி தனிமனித இடைவெளி அவசியம், லிப்ட் மற்றும் நகரும் படிக்கட்டுகளில் தனிமனித இடைவெளி பின்பற்ற வேண்டும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் பூங்காக்களில், தனிமனித இடைவெளி பின்பற்ற வேண்டும், தின்பண்டம் விற்க அனுமதி கிடையாது, கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து வருபவர்களை அனுமதிக்க கூடாது, மக்கள் தண்ணீர் பாட்டில் கொண்டு செல்ல வேண்டும், உடல் வெப்ப பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்க வேண்டும், கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே