2018ல் நடந்தது போல் தூத்துக்குடியில் மீண்டும் ஒரு துப்பாக்கிசூடு நடக்க விரும்பவில்லை – தமிழக அரசு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க தேவையான நடவடிக்கையை எடுக்கக்கூறி பிரதமர் மோடி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில், பல்வேறுகட்ட போராட்டங்கள் மற்றும் உயிர் தியாகங்களுக்கு பின்னர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆளை மூடப்பட்ட நிலையில், அங்கு 1050 மெட்ரிக் டன் அளவில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையம் இருப்பதாகவும், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டுமாவது அனுமதி அளிக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் நிறுவனம் மற்றும் வேதாந்தா நிறுவனம் மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியது.

இது தொடர்பாக டெல்லி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த மனு மீதான விசாரணையில் மத்திய அரசு ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி மட்டும் செய்துகொள்ளலாம் என அனுமதி வழங்குவதாக வாதிட்டது. இன்றைய விசாரணையில், தமிழக அரசு சார்பாக வாதிடப்பட்டது.

இது தொடர்பான விவாதத்தில், ” ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு திறக்க அனுமதி வழங்காது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். தமிழகத்தில் மட்டுமல்லாது இந்திய அளவில் உள்ள பல ஆலைகளில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாம். ஸ்டெர்லைட் ஆளை மீது தமிழக மக்களுக்கும், தூத்துக்குடி மக்களுக்கும் நம்பிக்கை இல்லை.

கடந்த 2018 ஆம் வருடத்தில் நதத துப்பாக்கி சூடு சம்பவத்தை போல, மற்றொரு துப்பாக்கி சூடு நடப்பது போன்ற சூழ்நிலையை தமிழக அரசு விரும்பவில்லை. மீண்டும் ஸ்டெர்லைட் ஆளை எதோ ஒரு காரணத்திற்காக திறக்கப்படும் பட்சத்தில், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் ” என்று தெரிவித்தது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே