டெங்குவை மர்ம காய்ச்சல் என்று அரசு தவறான பிரச்சாரம் செய்து வருகிறது : மு.க.ஸ்டாலின்

டெங்குவால் பாதிக்கபட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அங்கு சென்ற ஸ்டாலின் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வரும் 31 பேரை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதிகளை சுகாதாரமாகவும், தூய்மையாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அலட்சியமாக செயல்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே