பொருளாதார ஊக்கத் திட்டத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் கோடி அல்ல, வெறும் ரூ.1,86,650 கோடி தான் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் மற்றும் பொதுமுடக்கத்தால் இந்திய பொருளாதாரம் சரிவை சந்தித்திருக்கிறது.
இந்தியா மட்டுமின்றி சர்வதேச நாடுகள் அனைத்தும் பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைந்துள்ளன.
இந்த பொருளாதார மந்த நிலையை மீட்டெடுப்பதற்கு ரூ.20 லட்சம் கோடியில் திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
பின்னர் ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
இந்நிலையில் அறிவிக்கப்பட்டது ரூ.20 லட்சம் கோடி அல்ல, வெறும் ரூ.1,86,650 கோடி தான் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “பிரதமரும் நிதி அமைச்சரும் அறிவித்த பொருளாதார ஊக்கத் திட்டத்தின் மதிப்பு ரூ 20 லட்சம் கோடி அல்ல, வெறும் ரூ.1,86,650 கோடி தான். ரூ.1,86,650 கோடி மட்டுமே ! இந்த எண்ணை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள். இன்னும் சில மாதங்களில் உண்மை தெரிந்துவிடும்” என கூறியுள்ளார்.