ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நிலவரம்..!!

கோவை மாவட்டத்தில் மொத்தமுள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் முதற்கட்டமாக 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

5 ஊராட்சி ஒன்றியங்களிலும் ஆயிரத்து 220 பதவிகளுக்கு, 2 ஆயிரத்து 939 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இன்றைய தேர்தலில் மொத்தமாக 3 லட்சத்து 46 ஆயிரத்து 350 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

293 வாக்குச்சாவடி மையங்களும், அவற்றின் கீழ் 642 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் முதற்கட்டமாக 8 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மொத்தமாக 2 ஆயிரத்து 162 பதவிகளுக்கு, 7 ஆயிரத்து 125 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

671 வாக்குப்பதிவு மையங்களும், ஆயிரத்து 403 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

மொத்தமாக 7 லட்சத்து 20 ஆயிரத்து 67 வாக்காளர்கள் இன்று வாக்களிக்க உள்ளனர். காலை முதலே வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்து வருகின்றனர். 

தருமபுரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் முதற்கட்டமாக 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

ஆயிரத்து 535 பதவிகளுக்கு 4 ஆயிரத்து 94 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 940 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இன்றைய தேர்தலில் மொத்தமாக 5 லட்சத்து 84 ஆயிரத்து 610 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தமுள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் முதற்கட்டமாக 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஆயிரத்து 683 பதவிகளுக்கு ஆயிரத்து 5 ஆயிரத்து 249 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

617 வாக்குப்பதிவு மையங்களும் ஆயிரத்து 160 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டு, வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இன்றைய தேர்தலில் மொத்தமாக 6 லட்சத்து 85 ஆயிரத்து 27வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் மொத்தமுள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் முதற்கட்டமாக 7 ஊராட்சி ஒன்றியங்களில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

874 பதவியிடங்களுக்கான தேர்தலில் 2 ஆயிரத்து 760 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

657 வாக்குச்சாவடிகளில் 70 வாக்குசாவடிகள் பதற்றமானவைகளாக கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இன்றைய தேர்தலில் 3 லட்சத்து 79 ஆயிரத்து 218 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். லக்காபுரம் அருகே மை இல்லாததால் வாக்குப்பதிவு 10 நிமிடம் தாமதமாக தொடங்கியது. 

நாமக்கல் மாவட்டத்தில் முதற்கட்டமாக 8 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்களை தவிர்த்து இன்றைய தேர்தலில் ஆயிரத்து 244 பதவியிடங்களுக்கு  3 ஆயிரத்து 875 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

893 வாக்குச்சாவடிகளில் விறுவிறு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மொத்தமாக 4 லட்சத்து 59 ஆயிரத்து 370 வாக்காளர்கள் இன்று வாக்களிக்க உள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே