மேக மூட்டம் காரணமாக சூரிய கிரகணத்தை பார்க்க முடியவில்லை – பிரதமர் மோடி ட்வீட்

மேக மூட்டம் காரணமாக தன்னால் சூரிய கிரகணத்தை பார்க்க முடியவில்லை என்றும் பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

30 ஆண்டுகளுக்கு பிறகு நெருப்பு வளையத்துடன் சூரிய கிரகணம் இன்று தோன்றியுள்ளது.

தென் தமிழகம், கொச்சின், அஹமதாபாத், புவனேஸ்வர் உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் இந்த சூரிய கிரகணம் தோன்றியுள்ளது.

எனினும், கோவை உள்ளிட்ட இடங்களில் மேக மூட்டம் காரணமாக சூரிய கிரகணத்தை பார்க்க முடியவில்லை.

இந்த நிலையில், பல இந்தியர்களைப் போல நானும் சூரிய கிரகணத்தை பார்க்க தயாரானேன்; ஆனால் மேக மூட்டம் காரணமாக பார்க்க முடியவில்லை என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

எனினும், கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் பார்க்க முடிந்த கிரகண நிகழ்வின் நேரலை வீடியோவை பார்த்ததாக அவர் பதிவிட்டுள்ளார்.

வானியல் நிபுணர்களிடம் கிரகணம் குறித்து மேலும் கேட்டு அறிந்துக் கொண்டதாகவும்; அதன் மூலம் இந்த விஷயத்தில் தனது அறிவு வளர்க்கப்பட்டிருப்பதாகவும் அவர் ட்வீட் செய்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே