உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை உடல்நலக்குறைவால் காலமானார்

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை உடல்நலக்குறைவால் காலமானார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலமானார்.

உடல்நலக்குறைவு காரணமாக யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் சிங் பிஷ்ட் கடந்த மார்ச் 15ஆம் தேதி தில்லயில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை 10.44மணியளவில் சிகிச்சைப் பலனின்றி அவர் காலமானார்.

இத்தகவலை உத்தரப்பிரதேச மாநில தலைமைச் செயலாளர் உறுதி செய்துள்ளார்.

ஆனந்த் சிங் பிஷ்ட் வனக்காவலராகப் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே