வாயை மூடிக்கொண்டு இருங்கள்… – ட்ரம்பின் பேச்சுக்கு உயர் காவல் அதிகாரி கண்டனம்

ட்ரம்பின் சர்ச்சை பேச்சை காவல் அதிகாரி ஒருவர் கடுமையாக சாடியுள்ளார்.

அமெரிக்காவின் மினசொட்டா மாகாணத்தில் ஜார்ஜ் ப்ளாய்ட் என்ற கருப்பினத்தவரை அம்மாகாண காவலர்கள் வன்முறையாக நடத்தியதால் அவர் இறந்தார்.

போலீஸாரின் இந்த செயலை கண்டித்து மினசோட்டாவில் போராட்டம் வெடித்தது.

அதை தொடர்ந்து நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், டெல்லாஸ் என அமெரிக்காவின் பல மாகணங்களிலும் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக அதிபர் ட்ரம்ப் ஆளுநர்களை சாடியுள்ளார்.

கலவரத்தை அவர்கள் கட்டுப்படுத்த தவறியதாகவும், கலவரத்தை கட்டுப்படுத்த தவறினால் ராணுவத்தை கூட களம் இறக்குவேன்.

இது ஆதிக்கம் செலுத்த வேண்டிய நேரம் என தெரிவித்தார்.

ட்ரம்பின் இந்த பேச்சை காவல் அதிகாரி ஒருவர் கடுமையாக சாடியுள்ளார்.

அவர் கூறியதாவது, அதிபரால் ஆக்கப்பூர்வமாக ஏதும் செல்ல இயலவில்லை என்றால் வாயை மூடிக்கொண்டு இருங்கள். அது ஆதிக்கம் செலுத்தும் நேரமில்லை.

இந்த நேரத்தில் பலத்தை காட்டுவது தலைமைக்கு அழகல்ல. இது ஹாலிவுட் படம் அல்ல நிஜ வாழ்க்கை என கடுமையாக பேசியுள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே