#BREAKING : இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு – பிரதமர் மோடி

நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றிய பிரதமர் மோடி அடுத்த 21 நாட்களுக்கு நாடு தழுவிய அளவில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த ஊரடங்கு இன்று ( மார்ச் 24) நள்ளிரவு முதல் அமல்ப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு இது போன்ற கடுமையான முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கூறிய பிரதமர் மோடி பல்வேறு அறிவிப்புகளையும், ஆலோசனைகளையும் நாட்டு மக்களுக்கு வழங்கினார்.

1. அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்படுகிறது

2. கொரோனாவை எதிர்கொள்ள சமூக இடைவெளி மட்டுமே ஒரே வாய்ப்பாக உள்ளது

3.முழு ஊரடங்கால் பொருளாதார பாதிப்பு ஏற்படும் என்றாலும், மக்களின் உயிர் முக்கியமானது

4. மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று கைகூப்பி வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்

5. 21 நாட்களுக்கு முழு ஊரடங்கை மக்கள் பின்பற்றாவிட்டால், நாம் 21 ஆண்டுகள் பின்னோக்கி செல்லும் நிலை ஏற்படும்

6. தேசத்தையும் ஒவ்வொரு குடிமகனையும் காப்பாற்றவே இந்த முடிவு

7. மருத்துவர்கள், செலிவிலியர்கள் உட்பட மக்கள் சேவையில் ஈடுபடுவோருக்காக வீட்டில் இருந்தபடியே பிரார்த்தியுங்கள்

8. அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

9. கொரோனா பாதிப்பு சங்கிலித்தொடரை உடைத்தெறிய வேண்டிய அவசியம் உள்ளது

10. சிறந்த சுகாதார கட்டமைப்பை கொண்ட அமெரிக்கா, இத்தாலியால் கூட கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை

11. வீட்டை விட்டு வெளியே வந்தால், கொரோனாவை வீட்டுக்குள் கொண்டு வந்துவிடுவீர்கள்

12. பேரிடரில் இருந்து இந்தியா எப்படி தற்காத்துக் கொள்கிறது என்பதை காட்ட வேண்டிய தருணம் இது!

13. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.15,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது

14. வதந்திகளையும், மூட நம்பிக்கைகளையும் நம்ப வேண்டாம்; அரசின் ஆலோசனைகளை மட்டும் மக்கள் பின்பற்ற வேண்டும் 

15. அடுத்த 21 நாட்கள் இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானது

16. 21 நாட்கள் மிக நீண்டவை என்றாலும் அது உங்களை காக்கும்

17. கடினமான சூழலில் இருந்து இந்தியா மீண்டு வரும் என நம்புகிறேன்

18. உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள்

19. இன்று நாம் எடுக்கும் நடவடிக்கை தான், நம்மை பேரிடரில் இருந்து காக்கும்

20. 21 நாளை நம்மால் சமாளிக்க முடியாது எனில் பல குடும்பங்கள் நிரந்தரமாக சிதையும்

21. கொரோனா தொற்று இருக்கும் நபரை எளிதில் கண்டறிய முடியாது என்பதால் எச்சரிக்கையாக இருங்கள்

22. மக்கள் ஊரடங்கை காட்டிலும் இது கடுமையான ஊரடங்கு

23. ஒவ்வொரு மாநிலமும், ஒவ்வொரு மாவட்டமும், ஒவ்வொரு ஊரும் முடக்கப்படுகிறது

24. கொரோனா பாதிப்பு சங்கிலித்தொடரை முறியடிக்க 21 நாள் அவசியம் என நிபுணர்கள் கூறுகின்றனர்

25. கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரம்பத்தில் ஆரோக்கியமாக இருப்பதாகவே தெரிவார்கள்

26. ஊரடங்கால் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே