ஒலிம்பிக் போட்டியை ஓராண்டிற்கு ஒத்திவைக்க சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலிடம் ஜப்பான் கோரிக்கை!

கொரோனாவின் தாக்கம் உலக அளவில் அதிகரித்துள்ளதால் வரும் ஜூலை மாதம் டோக்கியோவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் போட்டிக்கு வீரர்களை அனுப்பப்போவதில்லை என கனடாவும், ஆஸ்திரேலியாவும் கூறின.

இந்நிலையில் போட்டிகளை ஒத்திவைக்குமாறு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கோரிக்கை விடுத்தார்.

மேலும் உலக நாடுகள் அனைத்தும் ஒலிம்பிக் போட்டியை ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில் ஜப்பான் பிரதமர் மற்றும் உலக நாடுகளின் கோரிக்கையை அனைத்துலக ஒலிம்பிக் மன்றத் தலைவர் தாமஸ் பாக் ஏற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் அறிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே