இலவச தடுப்பூசி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது – நீதிபதிகள்

கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது

போர்க்கால அடிப்படையில் அனைத்து மக்களுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யவும், தனியார் மருத்துவமனையில் போடப்படும் கொரோனா தடுப்பூசிக்கு விலை நிர்ணயம் செய்தும் உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி ஹேமலதா அமர்வு, தற்போது கொரோனா தடுப்பூசி குறித்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறியது. வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 8 வாரத்திற்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே