தண்டோரா போட்டு வாக்கு சேகரித்த பாமக வேட்பாளர்

சேப்பாக்கம்-திருவல்லிகேணி தொகுதியில் வீதி, வீதியாக தண்டோரா போட்டு வாக்குறுதிகளை கூறி பாமக வேட்பாளர் கஸ்ஸாலி பிரச்சாரம் மேற்கொண்டார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கிடையே சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் ஏ.வி.ஏ.கஸ்ஸாலி போட்டியிடுகிறார். இவர் தொகுதியில் மார்ச் 22-ம் தேதி முதல் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பெசன்ட் சாலை, நடேசன் சாலை, ஐஸ்ஹவுஸ் போன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கஸ்ஸாலி நேற்று துண்டுப்பிரசுரங்களை வழங்கி பிரச்சாரம் செய்தார். தொடர்ந்து ‘டிரம்ஸ்’ இசைக்கருவியை கழுத்தில் மாட்டிக்கொண்டு தண்டோரா போல அதை இசைத்தவாறு வாக்குச் சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

இந்த தொகுதியில் தன்னை ஏன் பேரவை உறுப்பினராக தேர்வு செய்ய வேண்டும், தொகுதியில் செய்யவுள்ள அம்சங்கள் உள்ளிட்ட தகவல்களை தண்டோரா போட்டு கூறினார். தண்டோரா இசையை ஒலியை எழுப்பி கஸ்ஸாலி பிரச்சாரம் செய்தது பொதுமக்கள் கவனத்தை பெரிதும் ஈர்த்தது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே