கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தை தமிழகத்திற்கு ஒதுக்கியது மத்திய அரசு..!!

கருப்பு பூஞ்சை நோய்க்கு பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின் – பி மருந்து தமிழகத்துக்கு 100 குப்பிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பெரும்பாலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கருப்பு பூஞ்சை நோய் தாக்கிவருகிறது.

இந்நோய்க்கான மருந்தை ஒதுக்கீடு செய்யவேண்டும் என தமிழக அரசு பரிந்துரை செய்ததின்பேரில் மத்திய அரசு தற்போது, ஆம்போடெரிசின் – பி மருந்தை தமிழகத்துக்கு 100 குப்பிகள் ஒதுக்கீடு செய்துள்ளது.

முன்னதாக, தமிழக மருத்துவ பணிகள் கழகத்தின் சார்பாக 5000 குப்பிகள் ஒதுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மத்திய அரசு 100 குப்பிகளை ஒதுக்கீடு செய்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே