முழு பொதுமுடக்கம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!

ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

அத்துடன் மக்கள் பொதுநலன் கருதி, நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன் படி மாவட்டவாரியாக காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முழு ஊரடங்கில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பது பற்றி முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

காய்கறிகள் உள்ளிட்டவை தடையின்றி மக்களுக்கு கிடைக்க தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்து வருகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், எம. ஆர்.கே.பன்னீர்செல்வம், செயலாளர் கோபால் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே