கரோனாவால் பாதிக்கப்பட்ட குஜராத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினார் அபய் பரத்வாஜ் செவ்வாய்க்கிழமை காலமானார்.

குஜராத்தை சேர்ந்த அபய் பரத்வாஜ் (வயது 66) கடந்த ஜூன் மாதம் பா.ஜ.க. சார்பில் மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி கரோனா உறுதி செய்யப்பட்டு ராஜ்கோட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மூச்சு திணறல் பிரச்னை காரணமாக செப்டம்பர் 15ஆம் தேதி முதல் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

எனினும், சிகிச்சை பலனளிக்காமல் செவ்வாய்க்கிழமை காலமானார்.

இவரது மறைவிற்கு பிரதமர் மோடி உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே