ஊர‌க உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற இடங்கள்

தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேசிய கட்சியான பாஜக ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியில் 84 இடங்களையும், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவியில் 6 இடங்களையும் பெற்றுள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாஜக நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலிலும் அதே கூட்டணியில் போட்டியிட்டது.

மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேர்தலில் பாஜக 6 இடங்களில் வென்றுள்ளது.

இதில் கன்னியாகுமரியில் இரண்டு இடங்களிலும் கோவையில் ஒரு இடத்திலும் பாஜக வென்றுள்ளது.

இதைப் போன்று தேனி, நாகை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளில் பாஜக 84 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

அதில் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 31 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களையும் அதற்கு அடுத்தபடியாக தஞ்சையில்-7, நாகையில்-6, நீலகிரியில்-4 இடங்களையும் கைப்பற்றி உள்ளது.

இராமநாதபுரம், தூத்துக்குடி, திருவாரூர், திருப்பூர், கோவை, கரூர் ஆகிய பகுதிகளில் தலா மூன்று இடங்களில் வெற்றி கண்டுள்ளது.

கடலூர், சிவகங்கை, திருவள்ளூர், நாமக்கல், புதுக்கோட்டை, மதுரை ஆகிய மாவட்டங்களில் தலா இரண்டு இடங்களில் வென்றுள்ளது.

விருதுநகர், தேனி, திருவண்ணாமலை, திருச்சி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் தலா ஒரு இடத்தில் வெற்றி கண்டுள்ளது

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே