திடீர் திருப்பம்..; பாஜகவை வீழ்த்த என்.ஆர்.காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்க தயார் – புதுச்சேரி காங்கிரஸ்..!!

பாஜக பொது எதிரி என்றும், அதை வீழ்த்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க தயார் என புதுச்சேரி காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் நாராயணசாமி அரசு கவிழந்ததை அடுத்து தற்போது குடியரசு தலைவர் ஆட்சி அமலில் உள்ளது.

கூட்டணியில் உள்ள பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக சேர்ந்து ஆட்சியை கவிழ்த்தன.

இந்நிலையில் அந்த மூன்று கட்சிகளும் சேர்ந்து கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க முடிவு செய்தன.

இந்நிலையில் காரைக்கால் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரியில் பாஜக தலைமையில் ஆட்சி அமையும் என்றார்.

இதனால் சற்றே கலக்கம் அடைந்த என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பாஜக உடனான கூட்டணி குறித்து அறிவிக்காமல் இருந்தார்.

இந்நிலையில் என்.ஆர்.காங்கிரசை கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

முன்னதாக திமுக என்.ஆர்.காங்கிரசுக்கு கூட்டணி அழைப்பு விடுத்த நிலையில், எதிரெதிராக இருந்த காங்கிரஸ் கூட்டணிக்கு அழைத்துள்ளது.

பொது எதிரியான பாஜகவை வீழ்த்த எதையும் விட்டுக்கொடுக்க தயாராக உள்ளோம் என புதுச்சேரி காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

அதே போல் திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருவதாகவும் புதுச்சேரி காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது.

என்.ஆர்.காங்கிரஸ், திமுக, காங்கிரஸ் போன்ற மதசார்பற்ற அணிகள் சேர்ந்தால் பொது எதிரியான பாஜகவை வீழ்த்தி மிகப்பெரிய வெற்றியை காணமுடியும் என்றும், அதனால் இதுகுறித்து ரங்கசாமி முடிவெடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே