21 வயதில் பஞ்சாயத்து தலைவராகி சாதனை!

கிருஷ்ணகிரி அருகே பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்ட 21 வயது கல்லூரி மாணவி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

இந்த இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.

இந்த வாக்கு எண்ணிக்கையில் அதிமுகவும், திமுகவும் அநேக இடங்களில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் கிருஷ்ணகிரி அருகே 21 வயது கல்லூரி மாணவி பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காட்டிநாயக்கன் தொட்டி கிராம ஊராட்சி தலைவர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட பிபிஏ இறுதி ஆண்டு மாணவி ஜெ.சந்தியா ராணி வெற்றி பெற்றுள்ளார்.

தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களை விட 210 வாக்குகள் அதிகம் பெற்று அவர் வெற்றி பெற்றுள்ளார்.

இதன்மூலம் தற்போதைய உள்ளாட்சித் தேர்தலில் மிக இளம் வயதில் பஞ்சாயத்து தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

இதுகுறித்து பேசிய சந்தியா ராணி, என்னை நம்பி 4 கிராமங்கள் ஓட்டு போட்டுள்ளது. அவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும். எங்கள் ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே