செங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் வாக்குகள் எண்ணும் பணிக்கு தனி தேதி அறிவிக்கப்படும்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் 26வது வார்டு மற்றும் 19-ஆவது வார்டு கவுன்சிலர் பதவி காண வாக்குகள் எண்ணும் பணி தனி தேதி அறிவிக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாவட்ட கவுன்சிலர் 26 ஆவது வார்டு வாக்காளர் பட்டியலில் திமுக வேட்பாளர் செந்தில் குமார் பெயர் இல்லை எனக் கூறி வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து சம்பவ பகுதியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் கந்தசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

மாவட்டம் முழுவதும் 18 இடங்களில் வாக்கு எண்ணும் பணி நடைபெறுவதாகவும்; இதற்காக 10 ஆயிரம் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே