பெட்ரோல், டீசல் விலை விறுவிறுவென உயர்ந்து வரும் நிலையில் இன்று தொடர்ந்து 12 நாளாக விலை ஏற்றம் கண்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு இருப்பதால் நாடு முழுவதும் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். தமிழக்தின் லிட்டர் 100 ரூபாயை நெருங்கிகிறது.
ஒரு சில மாநிலங்களை 100 ரூபாயை தாண்டிவிட்டது.
சென்னையில் நேற்று பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.92.25க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.85.63க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.
இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 34 காசுகள் உயர்ந்து லிட்டர் ரூ.92.59க்கு விற்கப்படுகிறது.
டீசல் லிட்டருக்கு 35 காசுகள் விலை அதிகரித்து லிட்டர் ரூ.85.98க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மற்ற நகரங்களை பொறுத்தவரை, டெல்லியில் பெட்ரோல் ரூ . 90.58 க்கும், டீசல் ரூ . 80.97 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மும்பையில் பெட்ரோல் ரூ. 97க்கும், டீசல் லிட்டருக்கு ரூ. 88க்கும், கொல்கத்தாவில் பெட்ரோல் ரூ. 91.78க்கும், டீசல் ரூ. 84.56க்கும் விற்பனை செய்யப்படுகிறது.