திரையரங்குகளில் 100% அனுமதி விதிமீறல்..; தமிழக அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்..!!

தமிழகத்தில் திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பேரிடர் காரணமாக தியேட்டர்கள் கடந்த 6 மாத காலமாக மூடப்பட்டு கிடந்தன.

இதை தொடர்ந்து கொரோனா பரவல் குறைய குறைய தளர்வுகளின் அடிப்படையில் கடந்த அக்டோபர் மாதம் முதல் 50% இருக்கைகளுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டன.

இருப்பினும் மக்கள் கூட்டம் வராததால் புது படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. பழைய படங்களே தியேட்டரில் வெளியாகி ஒடின.

தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டுமென நடிகர்கள் விஜய், சிம்பு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது. 

இந்த அறிவிப்பு மருத்துவர்கள் உள்ளிட்டோர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

அதில் “திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியிருப்பது விதிமீறல், திரையரங்குகளுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை திரும்பப்பெற வேண்டும்.

திரையரங்குகளில் 50 சதவீதம் வரை பார்வையாளர்களுக்கு அனுமதி என்ற உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலை தமிழ்நாடு அரசு பின்பற்ற வேண்டும்.

திரையரங்குகளில் 50 சதவீதம் வரை பார்வையாளர்களுக்கு அனுமதி என்ற உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலை தமிழ்நாடு அரசு பின்பற்ற வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே