விடுதலைப் போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவாவின் 136 ஆவது பிறந்த நாளை, அவரது சொந்த மாவட்டமான தர்மபுரியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள சுப்பிரமணிய சிவாவின் நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் மலர்விழி மரியாதை செலுத்தினார்.
அருகிலுள்ள சுப்பிரமணிய சிவா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள அவரது சிலைக்கும் ஆட்சியர் மாலை அணிவித்தார். பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் சுப்பிரமணிய சிவாவின் தியாகத்தைப் போற்றி மரியாதை செலுத்தினர்.