தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு வழக்கில் இன்று தீர்ப்பு!

தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தக் கோரி தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பினை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று காலையில் வழங்குகிறது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன், தஞ்சை பெரியகோவில் உரிமைக் கழக ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், நாம்தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன், சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த சத்தியவேல்முருகன் உள்ளிட்ட பலர் தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கு விழாவை தமிழில், தமிழ் சைவ ஆகமங்களான தேவாரம், திருவாசகம் ஆகியவற்றை பாடி நடத்த உத்தரவிட வேண்டும் என வழக்குத் தொடர்ந்தனர்.

பல தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பினை ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே