திமுக எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி வீட்டில் போலீசார் சோதனை!

போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித்தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் கீழ், எம்.எல்.ஏ செந்தில் பாலாஜியின் வீட்டில் போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

2011-16 அதிமுக அரசில் செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார்.

பின்னர், கடந்தஆண்டில் திமுகவில் இணைந்த அவர் தற்போது அக்கட்சியின் எம்.எல்.ஏ ஆக உள்ளார்.

இந்த நிலையில், அவரது வீட்டில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்ததாக புகாரில் சோதனை நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே