டார்ச் லைட் சின்னம் வேண்டாம் என எம்ஜிஆர் மக்கள் கட்சி தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளது.

கமல் ஹாசன் கடந்த தேர்தல்களில் டார்ச் லைட் சின்னத்தில் மக்களை சந்தித்து வந்தார்.

அதனால் வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் தனக்கு டார்ச் லைட் கிடைக்கும் என கமல் ஹாசன் நினைத்திருந்த நிலையில், டார்ச் லைட் எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் தங்களுக்கு டார்ச்லைட் சின்னம் வேண்டாம் என எம்ஜிஆர் மக்கள் கட்சி தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளது. 

இதுகுறித்து கூறியுள்ள அக்கட்சியின் தலைவர் விஸ்வநாதன், ” மாற்று சின்னம் வழங்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளேன் .

எம்ஜிஆரின் நினைவுபடுத்தும் சின்னங்களை தராமல் டார்ச்லைட் சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது ஏற்புடையதல்ல.

எனவே எம்ஜிஆரை நினைவுபடுத்தும் வகையில் புதிய சின்னம் ஒதுக்குமாறு மீண்டும் கடிதம் எழுதியுள்ளோம் ” என்றார்.

எம்ஜிஆர் மக்கள் கட்சி வேண்டாம் என கூறியுள்ளதால் கமல் கட்சிக்கு டார்ச் லைட் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே