ராதாபுரம் மறு வாக்கு எண்ணிக்கை – இன்றுடன் தடை முடிவு

நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் விதித்திருந்த தடை இன்றுடன் முடிவுக்கு வருகிறது.

முன்னதாக ராதாபுரம் தொகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றதாக கூறி தேர்தலில் தோல்வியடைந்த திமுக வேட்பாளர் அப்பாவு வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடைசி மூன்று சுற்று வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவிட்டு இருந்தது. இதனையடுத்து கடந்த மூன்றாம் தேதி மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதற்கிடையில் மறு வாக்கு எண்ணிக்கை தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் இன்பதுரை தரப்பில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மறு வாக்கு எண்ணிக்கை முடிவை 23ஆம் தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் இவ்வழக்கு விசாரணை இன்று நடைபெறவுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே