நடிகர் அஜீத், நடிப்பு தவிர கார் ரேஸ், பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதல், போட்டோகிராஃபி, ஹெலி கேம் தொழில் நுட்பம் என்று பல விதங்களில் தன்னை ரிலாக்ஸ் செய்து கொள்பவர்.

எந்தளவுக்கு ஒரு தேர்ந்த நடிகராக மெனக்கெடுக்கிறாரோ அதே அளவு நல்ல குடும்பத் தலைவராகவும் மிளிர்பவர்.

அதனால் தான் தன்னுடைய ரசிகர்களால் செல்லமாக அல்டிமேட் ஸ்டார் என்று கொண்டாடப்பட்டு வருகிறார்.

இந்நிலையில், கடந்த வருடம் மிஸ்ஸான துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்த வருடம், சொல்லிவைத்தாற் போன்று தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறார். 

கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு டாப் 10 இடங்களுக்குள் வந்த தல அஜித், இந்த வருடம் தங்க பதக்கத்தை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கம் வென்ற நடிகர் அஜித்திற்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக காவல் துறை உயரதிகாரிகளும் நடிகர் அஜித்தைத் தொடர்பு கொண்டு பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே