இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய தென்னாப்பிரிக்க அணி!

கொரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு கிட்டத்தட்ட ஒரு வருடம் கடந்த நிலையில் முதல்முறையாக சர்வதேச கிரிக்கெட் களத்தில் விளையாடி உள்ளது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. 

இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன், இந்திய அணியை முதலில் பேட் செய்ய சொல்லி பணித்தார். 

இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்வுமன்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க கேப்டன் மிதாலி ராஜும், ஹர்மன்ப்ரீத் கவுரும் இன்னிங்ஸை ஸ்டெடி செய்தனர். இருவரும் 62 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். மிதாலி தனது 54வது ஒருநாள் கிரிக்கெட் அரை சதத்தை பதிவு செய்தார். 50 ஓவர் முடிவில் இந்தியா 177 ரன்களை குவித்தது. 

தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 40.1 ஓவரில் 178 ரன்களை குவித்தது. Lizelle Lee மற்றும் Laura Wolvaardt என தொடக்க வீரர்கள் இருவரும் 169 ரன்களை குவித்தனர். Lizelle Lee 80 ரன்களும், Laura Wolvaardt 83 ரன்களும் குவித்தனர். அது வெற்றிக் கூட்டணியாக அமைந்தது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே