மறைந்த பாஜக தலைவர் விஜயராஜே நினைவாக பிரதமர் நரேந்திர மோடி நாளை (திங்கள்கிழமை) 100 ரூபாய் நாணயத்தை காணொலி வாயிலாக வெளியிடுகிறார்.

பாஜகவின் முன்னோடிக் கட்சியான ஜன சங்கத்தை நிறுவிய தலைவர்களில் ஒருவர் விஜயராஜே.

இவர் அக்டோபர் 12, 1919-இல் பிறந்து, ஜனவரி 25, 2001-இல் மறைந்தார். இவரது பிறந்தநாளையொட்டி 100 ரூபாய் நாணயம் நாளை வெளியிடப்படுகிறது.

இந்த நாணயம் வெளியீட்டு விழாவில் விஜயராஜே குடும்பத்தினர் உள்ளிட்ட விருந்தினர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து காணொலி வாயிலாக பங்கேற்கின்றனர்.

விஜயராஜே மறைந்த காங்கிரஸ் தலைவர் மதவ்ராவ் சிந்தியா மற்றும் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவின் தாயார். 

பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ஜோதிராதித்ய சிந்தியா இவரது பேரன்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே