ஏப்ரல் 7-க்குள் கொரோனா பாதிப்பிலிருந்து தெலங்கானா மீளும்: சந்திரசேகர ராவ் நம்பிக்கை

வரும் ஏப்.,7ம் தேதிக்குள் கொரோனா இல்லாத மாநிலமாக தெலுங்கானா இருக்கும் என அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:

மாநிலத்தில் 70 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

குணமடைந்தவர்களை இன்று (மார்ச் 30) ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்படுவர்.

சிகிச்சையில் உள்ள 58 பேர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவர்.

வெளிநாடுகளில் இருந்து வந்த 25,937 பேர் தனிமைப்படுத்தப்பட்டு அரசின் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

இவர்கள் அனைவரின் தனிமைப்படுத்தல் காலமும் ஏப்.,7ம் தேதி முடிவடைகிறது. 

அதன்பின்பு, புதிதாக யாருக்கும் பாதிப்பு வரவில்லையெனில், கொரோனா தொற்று இல்லாத மாநிலமாக தெலங்கானா இருக்கும். ஊரடங்கு நேரத்தில் சுய கட்டுப்பாடு மிகவும் முக்கியம். இவ்வாறு அவர் பேசினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே

%d bloggers like this: