புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பைக் ரேஸை தடுக்க தனிக்குழு!

போக்குவரத்து போலீசாரின் எச்சரிக்கையை மீறி சென்னையின் பல்வேறு சாலைகளிலும் இளைஞர்கள் இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டிச் சென்றனர்.

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இருசக்கர வாகனங்களில் ரேஸ் விடுபவர்கள், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள், அதிக ஒலி எழுப்பிக்கொண்டு வாகனத்தை இயக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை எச்சரித்திருந்தது. 

இருப்பினும் விதிமுறைகளை காற்றில் பறக்க விட்ட இளைஞரகள் ஏராளமானோர் பைக் ரேஸில் ஈடுபட்டனர்.

சென்னை அண்ணாசாலையில் வாகனங்களில் தீப்பொறி பறக்கும் வகையில் பொதுமக்களை அச்சுறுத்தியபடி சென்றனர்.

மெரினாவில் இருந்து ஆர்.கே.சாலையில் செல்லக்கூடிய வாகனங்களில் பயணித்த பெரும்பாலானோர் மதுபோதையில் தாறுமாறாக வாகனங்களை ஓட்டி சென்றனர்.

அவர்களில் சிலரை பிடித்த போலீசார் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினர்.

தள்ளாடிய குடிமகன்களை தனியாக அமரவைத்து, போதை தெளிந்தவுடன் செல்லுமாறும் அறிவுறுத்தினர். 

இதனிடையே சென்னை அண்ணா சாலையில் பைக் ரேஸில் ஈடுப்பட்டவர்களில் ஒரு சிலர், போக்குவரத்து காவல்துறையினரை சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதோடு தாக்குதலும் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே