சென்னையைத் தவிர பிற இடங்களில் தேநீர் கடைகளைத் திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்க அனுமதி.
- வரும் 11 ம் தேதி முதல் டீ கடைகள் இயங்கலாம்.
- தேநீர் கடைகளில் நின்று , அமர்ந்தோ தேநீர் அருந்த அனுமதி கிடையாது.
- காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி.
- நோய்க் கட்டுப்பாடு பகுதிகளை தவிர மற்ற இடங்களில் இயங்கலாம்.
- நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்குகள் 24 மணி நேரமும் செயல்படலாம்.
- சென்னையில் தனியார் நிறுவனங்கள் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம்.