ஊரடங்கு குறித்து அடுத்தக்கட்ட அறிவிப்பை வெளியிடுக – மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

ஊரடங்கு குறித்த அடுத்தகட்ட அறிவிப்பை மத்திய – மாநில அரசுகள் சிறிதும் தாமதிக்காமல் அறிவிக்க வேண்டும் என  திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்ட இரண்டாவது ஊரடங்கு காலம், மே 3-ம் தேதியோடு முடிவடைவதை சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படுமா, நீக்கப்படுமா அல்லது படிப்படியாகத் தளர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பும்,  குழப்பமும் மக்கள் மனதில் நிலவுவதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மக்களைப் பாதுகாப்பதற்காக, மத்திய – மாநில அரசுகள் எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் அதற்குக் கட்டுப்பட்டு ஒத்துழைக்க வேண்டியது பொதுமக்களின் தலையாய கடமை என்றும் கூறியுள்ளார். 

அதேநேரத்தில், ஊரடங்கை நீட்டிப்பது அல்லது தளர்த்துவது குறித்து கடைசி நேரத்தில் அறிவித்து பதற்றத்தை அதிகரித்திடாமல், தக்க முடிவெடுத்து முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அப்போது தான் பொதுமக்களிடத்தில் உள்ள தேவையற்ற குழப்பத்தையும், பதற்றத்தையும் பெருமளவுக்குத் தவிர்க்க முடியும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே