#BREAKING : தமிழகத்தில் நாளை மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும்

உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பதை அடுத்து, தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து கடந்த 7ஆம் தேதி தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் சென்னை தவிர அனைத்து பகுதிகளிலும் திறக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

ஆனால் 7, 8 ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே திறக்கப்பட்ட நிலையில் திடீரென சென்னை ஐகோர்ட் உத்தரவு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது

சென்னை ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு மனுவில் அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், டாஸ்மாக் வருமானத்துக்கு பதிலாக மாற்று வருமானத்திற்கு வழி தேட நான்கைந்து ஆண்டுகள் ஆகும் என்றும்; டாஸ்மாக் கடைகளில் தனிமனித இடைவெளி உள்பட அனைத்து நிபந்தனைகளும் கடைபிடிக்க தயாராக இருப்பதாகவும், எனவே டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது

இந்த வழக்கின் விசாரணை நேற்றும், இன்றும் நடைபெற்ற நிலையில் தற்போது அதிரடி உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ளது. 

இந்த உத்தரவின்படி மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வரும் டாஸ்மாக் குறித்த வழக்கு விசாரணைக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் மதுக்கடைகளைத் திறக்க அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில், மது வாங்க ஞாயிறு முதல் திங்கள் வரை வண்ண டோக்கன்கள் வழங்க டாஸ்மாக் ஏற்பாடு
செய்துள்ளது.

மேலும், குறிப்பிட்ட வண்ண டோக்கன் உள்ளவர்கள், குறிப்பிட்ட நாளில் டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கிக் கொள்ளலாம் என்ற டாஸ்மார்க் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டோக்கன் சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் உள்ளிட்ட 7 வண்ணங்களில் ,மது டோக்கன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழகத்தில் சனிக்கிழமை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே