தமிழர்கள் இப்போது சாதிரீதியாக பிரிந்து கிடக்கிறார்கள் : திருமாவளவன்

சாதியற்ற சமூகமாக இருந்த தமிழர்கள் இப்போது சாதி ரீதியாக பிரிந்து கிடக்கிறார்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழ்மணி வ.மு.சே. திருவள்ளுவர் மணிவிழா அடையாறு முத்தமிழ் பேரவை அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், கீழடி நாகரிகம் கி.மு ஆறாம் நூற்றாண்டு என கணித்து இருப்பதன் மூலம் தமிழ் சமூகத்தில் சாதி மதம் எதுவும் இல்லை என்பது தெரிய வருவதாக கூறினார்.

சிந்து சமவெளி நாகரீகமும், கீழடி நாகரிகமும் ஒன்று என்று கூறிய திருமாவளவன், சாதியற்ற சமூகமாக இருந்த தமிழர்கள் இப்போது சாதி ரீதியாக பிரிந்து கிடப்பதாக கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே